ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா- 2017 மேடை நாடகப் பயிலரங்கம்


ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பாக முத்தமிழ் விழா- 2017 நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக புதனன்று (இன்று) மேடை நாடகப் பயிலரங்கம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் முனைவர் கி.சித்ரா தலைமை வகித்தார். தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் கு.பாக்கியம் அனைவரையும் வரவேற்று பேசினார். பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் லி.ராம்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிப்புக்கலை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

மேலும்  அவர் தனது உரையில் கூறுகையில், தமிழின் தொன்மையான கலை வடிவமான கூத்துக்கலையில் இருந்துதான் தற்காலத்திய நவீன நாடகங்கள் தோற்றம் பெற்றன என்றும், சங்ககால நாடக வகைகளில் பெண்கள் நடித்து வந்ததாகவும், ஆனால், இடைக்காலத்தில் ஆண்களே பெண் வேடம் அணிந்து நடித்ததாகவும், பிறகு 19ம் நூற்றாண்டிற்கு பின்தான் பாலாம்பாள், பாலாமணி போன்ற பெண் கலைஞர்கள் நடிக்கத் தொடங்கினர் என்று கூறினார்.

"நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" என்ற கவிமணியின் கூற்றிற்கேற்ப மக்களின் கண்ணையும், செவியையும், கருத்தையும் கவரும் வகையில் மேடைநாடகங்கள் அமைந்து மக்களின் வாழ்வைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.



பயிலரங்கத்தின் இறுதியில் மாணவ நாடகக் குழுவின் உறுப்பினர்களைக் கொண்டு, பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளும், இல்லத்தரசிகளின் துயரங்களையும் மையமாகக் கொண்ட தமிழச்சி தங்க பாண்டியனின் "கூந்தல் கனவுகள்" என்ற நாடகத்தினை அரங்கேற்றி மாணவியர்களுக்கு நேரடி செயல்முறை பயிற்சியும் அளித்தார்.



இதில், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் க.அபிநயா, சந்திரமதி, சந்திரிகா, ஸ்ரீஜா பிரியதர்ஷினி, கிருத்திகா, ஹரிபிரசாத், அருந்ததி, கல்பனா, கிருபாசக்தி ஆகிய மாணவ, மாணவிகள் இணைந்து நடத்திய கலைக் கூத்து நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.



இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும்  மாணவியர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...