தெரு விளக்குகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரால் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. 

மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனமானது திங்கள் முதல் வெள்ளி வரை கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள வார்டு பகுதிகளுக்கு செல்லும் போது, பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை குறைதீர்க்கும் பெட்டியில் போடப்பட்டு, அம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட ஐந்து மண்டலங்களின் அலுவலகத்திற்கு தினமும் மாலை 4.30 மணியளவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரிடமும் நேரடியாகச் சென்று பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து டிசம்பர் 26ம் தேதியன்று மத்திய மண்டல மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைத் தொட்டிகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல் உள்ளிட்ட அடிப்படை வசதி என பல்வேறு உதவிகள் கோரி 7 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மத்திய மண்டல மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...