தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளை மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கணக்கு ஒன்றை துவங்கி அவர்களுக்கு காலதாமதமின்றி பயிர்க் கடன் வழங்க அரசாணை உள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடன் பெற்றிருந்த 16067 சிறுகுறு விவசாயிகளின் பயிர்க் கடன் தொகை ரூ.88.83 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதில் 3519 விவசாயிகள் ரூ.27.31 கோடி அளவிற்கு பயிர்க்கடன் பெற்று பயணடைந்துள்ளனர். எஞ்சிய விவசாயிகளும் தமிழக அரசின் சிறப்பு பயிர்க்கடன் திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

பயிர்கடன் தள்ளுபடி பெறாத இதர விவசாயிகளும் ஏற்கனவே பெற்ற பயிர்கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி புதிய பயிர்க்கடன் பெற்றிட கேட்டுக்கொள்ளப்பட்டது. 

மேலும், இதுவரை கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் பெறாத தகுதியுள்ள விவசாயிகள் இருப்பின் அவர்கள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு பயிர்க்கடன் பெற்று பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...