கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சனூர் மற்றும் சீரப்பாளையம், சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரவளிமாதம்பூர், காங்கேயம்பாளையம் மற்றும் கிட்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டர்பாளையம் மற்றும் காட்டம்பட்டி, சுல்தான்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையம் உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் டிசம்பர் 14ம் தேதி முதல் 22ம் தேதியன்று (வியாழன்) வரை சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழனன்று (நாளை) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...