பாரதியார் பல்கலை-யில் பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து நடவடிக்கை கோரி அப்பல்கலை கழக பட்டதாரிகள் மனு

கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைகழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பல்கலைக் கழக முன்னாள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 



இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில் 76 பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளதாகவும், இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும் பாரதியார் பல்கலை கழக பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர். 

மேலும், துறைக்கு சம்மந்தமில்லாதவர்களிடமும், தகுதியற்ற நபர்களிடமும் 35 முதல் 60 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்து இருப்பதாகவும், இந்த முறைகேடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். 



இது தொடர்பாக புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதாகவும் கூறிய பட்டதாரிகள், தகுதியான நபர்களை நியமிக்கவில்லை எனில் தங்களது முனைவர் பட்டத்தை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...