500, 1000 ரூபாய் தடையால் வேலையிழந்த தங்கநகைத் தொழிலாளி தற்கொலை

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதால் வேலையில்லாத காரணத்தால் கோவையில் தங்கநகை தொழிலாளி தற்கொலை செய்து உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மா.ந.க வீதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அப்பகுதியில் தங்க சங்கிலிகளை கட்டிங் செய்யும் பட்டறை நடத்தி வந்தார். இதனிடையே, மத்திய பா.ஜ.க அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து இவரது தொழிலில் கடந்த சில மாதங்களாக தொய்வு ஏற்பட்ட காரணத்தால் முருகானந்தம் மன உளைச்சலுடன் காணப்பட்டதுடன் இதுகுறித்து தனது உறவினர்களிடமும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி ஸ்ரீதேவி குழந்தைகளுடன் ஞாயிறன்று காலையில் வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வீட்டிற்கு வந்தபோது முருகானந்தம் தூக்கில் தொங்கியபடி இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து முருகானந்தத்தை மீட்டபோது தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வெறைட்டிஹால் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டதுடன் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பு காரணமாக தற்போது வேலையில்லாத நிலை உள்ளதாகவும், வேலை செய்த கூலி பணத்தை வசூலிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள காரணத்தால் முருகானந்தம் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் தங்கநகை உற்பத்தி தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...