நேரு கல்விக் குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான பி.கே.தாஸ் நினைவு விருது வழங்கும் விழா அனுசரிப்பு


நேரு கல்விக் குழுமத்தின் திரு.பி.கே.தாஸ் நினைவு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டிற்கான பி.கே.தாஸ் விருது வழங்கும் விழா வியாழனன்று நேரு கல்விக் குழுமத்தின் பி.கே.தாஸ் நினைவு அரங்கத்தில் அனுசரிக்கப்பட்டது.



இதில், 10 கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் 12 தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதும், 2 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.



நேரு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்று விருது பெற்ற ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினார். இதைத்தொடர்ந்து, நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் இவ்விழாவில் முன்னிலை வகித்து பேசியதாவது:- பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்காலத்தில் இதுபோல் விருதினைப் பெற வேண்டும். இந்த கல்வி நிறுவனத்தில் வளர்ச்சி என்பது தரமும், நேரு கல்விக் குழுமத்தின் நிறுவன முறையையும் பி.கே.தாஸ் தொலைநோக்குப் பார்வையால் சாத்தியமானது. நேரு கல்விக் குழுமத்தின் தரம் ஆசிரியர்கள் கையில் உள்ளது. குரு கடவுளுக்கு மேலாக கருதப்படுகிறார்கள்'' என்றார்.



இதைத்தொடர்ந்து, நேரு கல்விக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியும், செயலாளருமான பி.கிருஷ்ணகுமார் பரிசு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து, தங்களது அறிவினையும், தரத்தினையும் மேம்படுத்த வேண்டும் என கூறினார்.



சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் மன்பிரீத் சிங் மன்னா ஏஐசிடிஇ இயக்குநர் பேசுகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வது தேவை. தொடர்ந்து, தங்களது திறனை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். பி.கே.தாஸ்-யின் தொலைநோக்குபார்வையால் தான் நேரு கல்விக் குழுமம் இத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும், அவர் காலத்தில் கல்லூரி துவங்குவதற்கான உறுதியான மனம் பாராட்டத்தக்கது'' என்றார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...