சுற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாடு தொடர்பாக சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் கோவையில் துவக்கம்!


சுற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாட்டினை புதிய தொழில்நுட்பத்தின் மூலம் எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பான சர்வதேச அறிவியல் கருத்தரங்கம் இன்று முதல் கோவையில் தொடங்கியுள்ளது.



இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடல் மற்றும் மீட்டுதலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையத்தின் செயல் அலுவலர் ரவி நாயுடு மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி பேசுகையில், உலக நாடுகள் முழுவதும் 1 லட்சத்து 44 ஆயிரம் வேதிப்பொருட்கள் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. வேதிப்பொருள்களின் மூலம் ஏற்படும் பாதிப்பின் காரணமாக 4 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவும், பலருக்கு புற்றுநோய்களும் ஏற்பட்டுவருகின்றது.

இதிலிருந்து காப்பாற்றுவதற்காக உலக பாதுகாப்பு என்ற அமைப்பின் மூலம் முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதற்கான அறிவியல் தொழில் நுட்பத்தினை தெரிந்து கொள்ளவதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் மாசுபாடு மதிப்பீடல் மற்றும் மீட்டுதலுக்கான கூட்டுறவு ஆராய்ச்சி மையம் மற்றும் நியூகாசில் பல்கலைக்கழகமும் இணைந்து மாசுபட்ட இடங்களை மீட்டெடுப்பதற்கான சர்வதேச கருத்தரங்கினை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

கோவையில் இன்று முதல் துவங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கில் பல்வேறு நியுசிலாந்து, அமெரிக்கா, போன்ற 12 நாடுகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் 18 பேராசிரியர்கள் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்களின் மூலம்சு ற்றுச்சூழல் மற்றும் மனிதநலத்தை பாதிக்கும் இராசாயன மாசுபாட்டினை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளனர். இந்தியாவின் சார்பில் 359 ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதன் மூலம் பெறப்படும் ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்த அவர்கள் மாசு மதிப்பிடல் மற்றும் மீட்டெடுத்தலுக்கான மையம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுவரை புதிய தொழில்நுட்பம், மென்பொருள் பொறியாளர்கள், இளைஞர்களை வைத்து 5 சதவீதம் மாசினை சுத்தப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...