அவினாசிலிங்கம் பல்கலை சார்பில் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை கருத்தரங்கம்

உலக அரங்கில் பொருளாதார தரத்தை முன்னேற்றுவதற்கான உத்திகள் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் முதலீடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை கருத்தரங்கம் கோவை அவினாசிலிங்கம் பல்கலையின் சார்பில் நடைபெற உள்ளது.



அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வளாகத்தில் மேலாண்மைத் துறையினர் சார்பில் வருகின்ற டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஏழாவது சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கமானது உலக அரங்கில் பொருளாதார தரத்தை முன்னேற்றுவதற்கான உத்திகள் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் முதலீடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை என்னும் தலைப்பில் நடைபெற உள்ளது. 

சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்தை தான்சானியா நிதித்துறை மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை தொழில் வர்த்தக சங்கத் தொழிற்துறையினரும், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன மேலாண்மைத் துறையும் ஒருங்கிணைந்து இந்த சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கானது மூன்று குழு விவாதங்கள் மற்றும் சிறப்புரைகள் கொண்டது. இக்குழு விவாதங்கள் கருத்தரங்கின் தலைப்பின் மூன்று பகுதிகளான முதலீட்டு சூழல், எதிர்காலத் தொழில்நுட்பத்தின் சிறந்த நகரங்கள் மற்றும் அதன் சவால்கள், அறிவுசார்ந்த மூலதனம் ஆகியவகைகளின் சிறந்த பங்களிப்பின் மூலம் ஒரு நாட்டின் எதிர்காலத்தில் மேம்பாடு அடைவதற்கான வித்துக்களை விதைக்கும் விதத்தில் அமையவிருக்கிறது.

சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள், தொழில் மற்றும் வர்த்தகத் துறையை சார்ந்தவர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆய்வாலர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கருத்தரங்கத்தினை அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் துவக்கி வைத்து தலைமையுரை ஆற்ற உள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு துவக்கவுரை ஆற்றவுள்ளார். தான்சானிய நாட்டு துணை தூதரக ஆணையர் முகமது எச். முகமது சிறப்புரை வழங்க உள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

Newsletter

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...