3 நாட்கள் விடுமுறைக்கு பின்பு பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதியன்று இரவு உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

ஜெயலலிதா மறைவையொட்டி டிசம்பர் 6-ஆம் தேதி ஒரு நாள் பொதுவிடுமுறை விடப்பட்டது. 7 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதா மறைவையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 8-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 



இதனையடுத்து, மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பொருட்களில் அனைத்திலுமே ஜெயலலிதாவின் உருவப்படம் உள்ளது. நோட்டு புத்தகங்கள், பள்ளி பை, லேப்டாப், சைக்கிள் என எண்ணற்ற பொருட்களை மாணவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் மனதைக் கவர்ந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து விட்டார் என்று அஞ்சலி நிகழ்ச்சியில் பல மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...