வேளாண்பல்கலையில் முனைவர் மூ.ராமமூர்த்தி ஐந்தாவது ஆண்டு நினைவு உரை நிகழ்ச்சி


உலகம் முழுவதும், உலக மண் தினமானது மண்ணின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு செய்வதற்காக கொண்டாடப்படுகிறது. இயற்கை அமைப்பில் மண்ணானது உணவு, நீர் மற்றும் ஆற்றல் போன்றவற்றை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க அங்கமாக உள்ளது. 

மேலும், இழந்துவரும் உயிரின வேறுபாடுகளையும் மற்றும் பருவநிலை மாற்றத்தையும் சீர்படுத்தும் ஊக்கியாக மண் செயல்படுகிறது. எனவே, உலக மண் தினத்தையொட்டி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மண்ணியல் மற்றும் வேளாண்மை வேதியல் துறை முனைவர். மூ.ராமமூர்த்தி 5-வது ஆண்டு நினைவுரையை ஏற்பாடு செய்தது.



முனைவர் மூ.ராமமூர்த்தி அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு உரையை, தேசிய மண் வகையீடு மற்றும் நிலப் பயன்பாட்டு திட்ட நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் ஆ.வேலாயுதம், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தினார்.



பேராசிரியர் மற்றும் தலைவர், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறை முனைவர் கோ.அருள்மொழிச்செல்வன்,  அவையோரை வரவேற்று பேசினார். அவரது வரவேற்பு உரையில் முனைவர். மூ.ராமமூர்த்தி 20ம் நூற்றாண்டின் மண்ணியல் விஞ்ஞானிகளில் மிகச்சிறந்த சாதனையாளர் என்று கூறினார். 

தனி அலுவலர், இயற்கை வள மேலாண்மை இயக்ககம் முனைவர் குமார், ஆ.வேலாயுதம் மண்ணியலில் குறிப்பாக மண் வகையீடு, தொலை உணர்வு மற்றும் இயற்கை வள மேலாண்மையில் அரிய பல படைப்புகளை கொடுத்துள்ளார் என்று கூறினார். மேலும் இத்தருணத்தில் மண் வளத்தை நிலைநிறுத்த மண்ணியல் விஞ்ஞானிகள் மிகச்சிறந்த பங்காற்ற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

முனைவர் மூ.ராமமூர்த்தி வெவ்வேறு வகையான மகசூல் குறிக்கோளை அடைவதற்கு மண் ஆய்வு மற்றும் உரப்பரிந்துரையை அளவுசார் முறையில் விளக்கினார், என்பதையும் எடுத்துரைத்தார். 

முன்னதாக பேராசிரியர் மற்றும் தலைவர் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை முனைவர் கோ.அருள்மொழிச்செல்வன் வாழ்த்துரையும், பேராசிரியர் (மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறை) மற்றும் கவுன்சிலர், இந்திய மண்ணியல் சங்கம் மகேந்திரன் நன்றியுரையும் வழங்கினர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...