கோவையில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான கிரிக்கெட் போட்டி




உலக மாற்று திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பங்கஜா மில்ஸ் மைதானத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட்  போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கரூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள்  பங்கேற்கின்றனர். 

இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் லீக் சுற்று முறையில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் 20 ஓவர்கள் விளையாடுவர். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணிகள் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடும் எனவும், இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி மாநில அளவிலான பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான அணியில் கலந்து கொள்ளும் என போட்டி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர். 



மேலும் இப்போட்டியில் பங்கேற்பவர்கள்  100 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளவர்கள், 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் என 3 பிரிவுகளாக ஒவ்வொரு போட்டிகளிலும் 14 வீரர்கள்  பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தனர். ஒலி எழுப்பும் பிளாஸ்டிக் பந்துகள் இப்போட்டிக்கு உபயோகிக்க  படுவதாக தெரிவித்தவர்கள் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பரஸ்பரம் தனியார் தொண்டு நிறுவனம் சுடர் ஒளி மற்றும் தமிழ்நாடு பார்வையற்றோர் கழகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.நாளை மாலை இறுதி போட்டிக்கு பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...