குறிச்சி குளத்தில் கழிவுகள் கொட்டிய வாகனத்தை சிறைபிடித்த பாதுகாப்பு இயக்கத்தினர்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அருகே அமைந்துள்ளது குறிச்சி குளம். சரியான மழைப்பொழிவு இல்லாததாலும், ஆகாயத் தாமரைகளின் அதிகப்படியான வளர்ச்சியினாலும் இக்குளம் வரண்டு காணப்படுகிறது. தற்போது, பல தொழிற்சாலை நிறுவனத்தினர் தங்களது கழிவுகளை இக்குளத்தில் கொட்டி வருவதாலும் சுகாதாரமின்றி காணப்படுகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், இந்த குறிச்சி குளத்தின் கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகள் மீட்கப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டது. 

இந்நிலையில், இன்று குறிச்சி குளத்தில் வாகனம் மூலம் தொழிற்சாலைக் கழிவுகளை கொட்ட முற்பட்டனர். அதனைக் கண்ட குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கழிவுகளை கொட்டிய அந்த வாகனத்தை சிறை

பிடித்து பொதுப்பணித் துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.





இதைத்தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும் எந்த அதிகாரியும் அப்பகுதிக்கு வராததால் குப்பை கொட்டிய நபரிடமே அதனை எடுக்க வைத்து, பின் எச்சரித்து அனுப்பப்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...