500, 1000 ரூபாய் தடையை எதிர்த்து கோவையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்ததைக் கண்டித்து கோவையில் பல்வேறு எதிர்க்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைக் கண்டித்து, திங்களன்று (இன்று) நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், புதிய 500 ரூபாய் தாள்கள் அதிகளவில் புழக்கத்திற்கு வராததால் சில்லறை பிரச்சனை நீடிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 





இதேப்போல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 





இதனிடையே, ரூபாய் தாள்கள் பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து, கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் கோவையில் இருந்து அம்மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...