காலணி அருந்ததால் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

ஈஷா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது, கோவை விமான நிலையத்தில் அவரது காலணி அருந்ததால் விமான நிலையத்தில் பேட்டிக்காக கூடியிருந்த பத்திரிகையாளர் சந்திப்பை அவர் தவிர்த்துச் சென்றார்.

கோவை மாவட்டத்தில் செயல்படும் ஈஷாவில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்பதற்காக மத்திய பாஜக ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி சனிக்கிழமையன்று (இன்று) விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது  கோவை விமான நிலையத்தில் அவர் அணிந்திருந்த காலணி அருந்ததைத் தொடர்ந்து, ஒரு கால் செருப்புடனும், மற்றொரு கால் செருப்பில்லாமலும் விமான நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே நடந்து வந்தார்.

அப்போது, அங்கு பத்திரிகையாளர்கள் கூடியிருந்தும் அவர்களுடனான சந்திப்பை தவிர்த்து கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டார். 

இதைத்தொடர்ந்து, ஈஷா யோகா மையம் செல்லும் வழியில் பேரூர் பகுதியில் காரை நிறுத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அங்கிருந்த செருப்பு கடைக்கு சென்று தனது செருப்பை தைத்தார். பின், செருப்பு தைத்ததற்கான கூலியாக 100 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் கடைக்காரரிடம் 100 ரூபாய்க்கு சில்லறை இல்லாததால் மீண்டும் செருப்பை வாங்கி கூடுதலாக 2 தையல்கள் இட்டு கொடுத்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட ஸ்மிருதி இராணி, ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

இதனிடையே, பலத்த பாதுகாப்பு வாகனங்களுடன் சென்ற மத்திய அமைச்சர் திடீரென சாலையோரம் காரை நிறுத்தி அங்கிருந்த கடைக்குச் சென்று சாதாரண இருக்கையில் அமர்ந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...