கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்



கியூபாவின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட்டின் முதுபெரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ தனது 90-வது வயதில் சனிக்கிழமையன்று (இன்று) உயிரிழந்தார்.

1962 ஆகஸ்ட் 13ம் தேதியன்று கியூபாவில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பிடல் காஸ்ட்ரோ. பல்வேறு செல்வங்களை பெற்ற குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கியூபா மக்களின் அடிமை நிலையைக் கண்டு தனது வசதியான வாழ்க்கையை புறந்தள்ளி மக்களுக்காக அமெரிக்காவின் ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட துவங்கினார். 

கியூபாவில் நடைபெற்று வந்த அமெரிக்காவின் கைக்கோளான சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக போராடி அதிகாரத்தை கைப்பற்றினார் பிடல் காஸ்ட்ரோ. இதையடுத்து, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ, 1959-ம் ஆண்டு முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1976-ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்ற காஸ்ட்ரோ 2008 வரை அப்பதவியில் நாடுபோற்றும் சிறப்பான செயல்களில் ஈடுபட்டார். 

கியூபாவின் விடுதலை காலம் தொட்டு, கடந்த 50 வருடத்திற்கும் மேலாக அதிபராக பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக அதிபர் பதவியை தனது சகோதரர் ராவல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

இருப்பினும், சோர்வடையாமல், தொடர்ந்து கியூபாவின் வளர்ச்சிக்காக திட்டமிடல் போன்ற செயல்களில் ஈடுபட்டு, மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கியூபாவை தனிச் சிறப்புமிக்க நாடாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிடல் தனது 90-வது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். 

இந்நிலையில், சில தினங்களாக உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பிடல் காஸ்ட்ரோ இன்று (சனிக்கிழமை) உயிரிழந்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...