கோவை-பெங்களூர் இடையிலான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவக்கப்படும்


கோவை-பெங்களூர் இடையிலான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவக்கப்படும் என சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வெர்மா தெரிவித்துள்ளார்.



கோவை இரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வெர்மா கூறியதாவது:- 

கோவை ரயில் நிலையத்தில் இட நெருக்கடியை தவிர்க்க பல அடுக்கு நான்கு மற்றும் இரு சக்கர வாகன நிறுத்த வசதிகள் 2 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகள் மூன்று அல்லது நான்கு மாதத்தில் துவக்கப்படும். கோவை- பெங்களூர் இடையிலான இரவு நேர இரயில் சேவை குறித்து இரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும்.

மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்த கோவை- பெங்களூர் இடையேயான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவங்க திட்டப்பட்டுள்ளது. மேலும், போத்தனூர்- பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பிரச்சனையில் தென்னக இரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 10 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது. கோவை இரயில் நிலையத்தில் குறுக்கலாக உள்ள முதலாவது நடைமேடை அகலப்படுத்தப்படும். சுரங்க நடைபாதை, லிப்ட், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்'' என ஹரி சங்கர் வெர்மா தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...