விசாரணைக்காக அழைத்துச் சென்ற மகனை காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை தற்கொலைக்கு முயற்சி

காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தன் மகனை காணவில்லை என கோவை வடவள்ளியை சேர்ந்த பூமி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை வடவள்ளி, ராமசாமி தில்லை வீதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பூமி. இவருடைய மகன் சரத் குமார். இவரும் கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சரத் குமாரை வடவள்ளி காவல்துறையினர் விசாரணை என்ற பேரில் அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. காவல் துறையினர் அழைத்துச் சென்று 7 நாட்கள் ஆகியும் மகனை காணவில்லை எனவும், விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் தன் மகன் எங்கு உள்ளார் என கூற மறுப்பதாகவும் குற்றம்சாட்டி சரத்குமாரின் தந்தை பூமி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதனன்று (இன்று) உடம்பில் மண்ணென்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். 



இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் பூமியை மீட்டு பந்தய சாலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்தியக் குழுவின் சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் மகனை காணவில்லை எனக்கூறி தந்தை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...