சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகளை உருவாக்க ஸ்வச் பெண்கள் அமைப்பினர் பயிற்சி

பாலித்தீன் பைகளினால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேட்டை குறைத்திடும் வகையில் பாலித்தின் பைகளை தவிர்த்து பழைய துணிகளினால் பைகளை உருவாக்கும் பயிற்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 



கோவை புரூக் ஃபீல்டு வனிகவளாகத்தில் ஸ்வச் பெண்கள் அமைப்பின் சார்பில் செவ்வாயன்று (இன்று) அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சுஜனி மற்றும் சங்கீதா, புரூக் ஃபீல்டு மார்க்கெட்டிங் மேலாலர் சுஜாதா ஆகியோர் இப்பயிற்சியை சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு பயிற்றுவித்தனர்.



இதுகுறித்து, ஸ்வச் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் சுஜனி நமது நிருபரிடம் கூறுகையில்:

பாலித்தீன் பைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத துணிப் பைகளை பயன்படுத்தவே இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம், பழைய துப்பட்டா, புடவை கொண்டு ஒரு வகை பையும், பருத்தி ஆடைகள் கொண்டு ஒரு வகை பையும் தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது.



இது மிகவும் எழிமையான தயாரிப்பு மற்றும் நன்மை தரக்கூடியது ஆகும். துணிகளால் ஆன பைகளை வாங்க மக்கள் சுனக்கம் காட்டி வரும் நிலையில் பழைய துணிகளினாலே பைகளை தயாரிப்பது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோவையை நேசிக்கும் மக்கள் கண்டிப்பாக கோவையை சுகாதாரமிக்க மாநகரமாக வைக்க உதவ வேண்டும்.

இந்த பயிற்சி 15 நாட்களுக்கு ஒரு முறை என மாதம் 2 முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பங்குபெருவோர் தங்களது வீட்டின் அருகில் வசிப்பவர்களிடமும் இதுகுறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கோவை விரைவில் பிளாஸ்டிக் இல்லா மாநகரமாக மாற அனைவரும் சேர்ந்து உழைப்போம்'' என்றார்.



Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...