பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி டிச. 6ம் தேதி கோவை விமான நிலைய முற்றுகை போராட்டம் அறிவிப்பு

பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி டிச. 6ம் தேதியன்று கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அறிவித்துள்ளது.



இதுகுறித்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

''450 ஆண்டுகாலம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த பாபர் மஸ்ஜிதை 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று நீதிமன்ற உத்தரவுகளை மீறி சங்கபரிவார கும்பல் இடித்து தகர்த்தது. இடிக்கப்பட்டு 24 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை பாபர் மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.

ஆவணங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது. இது மிகப்பெரும் அநீதி ஆகும்.

இதனை கருத்தில் கொண்டு பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் டிசம்பர் 6ம் தேதியன்று காலை 10 மணியளவில் கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...