குடும்ப அட்டை வழங்க அலைக்கழித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி


குடும்ப அட்டை வழங்க அலைக்கழித்ததால் விரக்தி அடைந்த 2 குழந்தைகளின் தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவை பால் கம்பெனி, தடாகம் பேருந்து நிலையம் அருகே வசித்து வருபவர் மீனா. கணவர் செந்திலால் கைவிடப்பட்ட மீனாவிற்கு 9 வயதில் மவுனிகா மற்றும் 7 வயதில் மிதுன் குமார் ஆகிய குழந்தைகள் உள்ளது. அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். 

இதனிடையே, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அட்டை வழங்கக் கோரி மீனா பல முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் மனு அளித்தும் இதுவரை குடும்ப அட்டை வழங்கப்படவில்லை. 

இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகள் மவுனிகாவிற்கு சிகிச்சை அளிக்க முடியாமலும், குழந்தைகளுக்கு சாதிசான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் பெற முடியாமலும் மீனா தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் வெள்ளியன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது இடது கை மணிக்கட்டை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். 

இதனைக்கண்ட பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல் துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து குடிமைப்பொருள் அதிகாரிகளிடம் அவரை அழைத்துச் சென்று முறையிட்டனர். 



இதைத்தொடர்ந்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...