தலைமறைவான கேரளா பெண் கோவை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தில் பங்கு சந்தையில் மோசடி செய்ததாக திருச்சூரை சேர்ந்த சம்சுதீன் என்பவரது மனைவி குரியா பிள்ளை மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையறிந்த அந்த பெண் ஷார்ஜா சென்று தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் குரியா பிள்ளை ஷார்ஜாவில் இருந்து விமானத்தின் மூலம் கோவை வருவதாக கேரள மாநில குற்ற பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதை தொடர்ந்து அவர்கள், கோவை விமான நிலைய குடியுரிமை பிரிவு போலீசாரிடம் இது குறித்து தகவல் கொடுத்து உஷார்படுத்தினர். அதன்படி இன்று கோவை வந்த குரியா பிள்ளையிடம் கோவை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் கோவை வந்து அந்த பெண்ணை கைது செய்து கேரள மாநிலத்திற்கு அழைத்துச்சென்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....