தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

தொலைத்தொடர்புத்துறையில் திறமையான ஆட்களை உருவாக்கவும், பயிற்சி அளிக்கும் விதமாகவும் கோவையில் இதற்கான ஒரு மையத்தை ஏற்படுத்த தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கோவையில் திறன் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக, துவங்கப்படவுள்ள இந்த மையத்தில், தொலைத்தொடர்புத்துறை அகண்ட அலைவரிசை (பிராட் பேண்ட்)தொழில்நுட்பம், ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு முறைகள், வலைத்தொடர்பு மேலாண்மை, வாடிக்கையாளர் சேவை திறன் மேம்பாடு, பழுதுநீக்கல் உள்ளிட்ட அணைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இந்த மையம் அரசின் நோக்கமான டிஜிட்டல் இண்டியா, மேக் இன் இண்டியா திட்டத்துக்கு உதவும் வகையில் பயிற்சி அளிக்கும். 



இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) எஸ்.பி கோச்சர் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ருத்திரமூர்த்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.



பின்னர், பேசிய தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி:- தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, தொழில்துறையை அடையவும் அனைவரின் நோக்கமான திறன்மிக்க இந்தியாவை உருவாக்குவதை லட்சியமாக கொண்டது. இவ்விரு நிறுவனங்களும், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்துவதோடு, மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு திறனை இளைஞர்களுக்கு அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தரும். நாடு முழுவதும் தொலைத்தொடர்புத்துறை திறனை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். எவரெஸ்ட் சிகரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க சிறப்பான பயிற்சியை இந்த மையம் அளிக்கும். அடுத்த இந்து ஆண்டுகளில் 8.67 மில்லியன் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். கிராமப்புற இளைஞர்களுக்கும் இப்பயிற்சியை கொண்டு செல்ல ஆன் லைன் மற்றும் ஆப் லைன் முறையை கையாள உள்ளோம். அதிநவீன தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையிலும் தயார் நிலை பயிற்சியாக இம்மையம் இருக்கும் என அவர் கூறினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...