மொசூலில் தலை துண்டிக்கப்பட்ட 100 உடல்கள் கண்டுபிடிப்பு

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் பகுதியை முற்றிலும் கைப்பற்ற ஈராக் ராணுவமும், குர்து படைகளும் தீவிரமாக உள்ளன. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து மொசூலின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் ராணுவத்தின் வசம் வந்து விட்டன. இருந்தாலும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மொசூலில் இருந்து 15 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஹம்மாம் அல்-அலில் நகரத்தின் விவசாய கல்லூரியின் வெளியே ஒரே இடத்தில் குவியலாக பிணம் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

எனவே, ராணுவத்தினர் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தனர். அப்போது அங்கு 100 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன.

மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது அங்கு தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் நிலையில் அங்கிருந்து தப்பி ஓடிய பொதுமக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்று புதைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதற்கிடையே, மொசூல் பகுதியில் பாஷிகா நகரம் மற்றும் 5 கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளை ஈராக் மற்றும் குர்து கூட்டு ராணுவம் மீட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...