காஷ்மீரில் நீடிக்கும் துப்பாக்கிச் சண்டை: எல்லையில் 300 தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லையில் ஊடுருவ 300 தீவிரவாதிகள் காத்திருப்பதால் எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதில் பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர். இதே வேலையில் பூஞ்ச் வட்டாரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்  முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர். 

இதை தொடர்ந்து ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பாட்டார். இந்நிலையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ 250 முதல் 300 தீவிரவாதிகள் முயன்றதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கு வசதியாக இந்திய படையினரை திசை திருப்பவே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே காஷ்மீரில் மர்மநபர்களால் பள்ளிகளுக்கு தீ வைக்கப்படுவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...