தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன்? - ஜி.கே.வாசன்


தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள காரணத்தால் தான் தாமதிக்கிறதா என விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,



''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது, கர்நாடக அரசும் தண்ணீர் திறந்துவிட தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் மற்றும் மானாவரி நிலத்திற்கு சேத அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படாதது வருத்தமளிக்கிறது. கச்சத்தீவை கைப்பற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேப்போல், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிரந்தர தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளை காவல்துறையினர் உதவியுடன் கண்காணிக்க வேண்டும். மேலும், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன் ?. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள காரணத்தால் தான் தாமதிக்கிறதா என விளக்கமளிக்க வேண்டும்'' என்றார்.

Newsletter

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மதுக்கரை போக்குவரத்து நெரிசல்: அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கல்லூரிப் பேருந்துகள், கார்கள், வணிக வாகனங்கள் உள்...

பண்டிகை காலம்: சென்னை-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அக்டோபர் முதல் நவம்பர் 2026 வரை சென்னை-கொல்லம் இடைய...

EPFO கட்டாய உறுப்பினர் ஊதிய வரம்பு ₹25,000 ஆக உயர்வு

EPFO-வில் கட்டாய உறுப்பினர் சேர்க்கைக்கான மாத ஊதிய உச்சவரம்பு ₹15,000-ல் இருந்து ₹25,000 ஆக செப்டம்பர் 17 முதல் உயர்த்தப...