குரூப்- 4 தேர்வு குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்- 4 தேர்வு நடைபெறுவதையொட்டி வெள்ளியன்று (இன்று) சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்:- 



''அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. அதன்படி, வரும் ஞாயிறன்று (6.11.2016) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்- 4 தேர்வு நடைபெறுவுள்ளது. இத்தேர்வில் கோவை மாவட்டத்தில் மட்டும் உள்ள 123 மையங்களில் 50 ஆயிரத்து 859 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளார்கள். 

இத்தேர்வினைக் கண்காணிக்க 70 மொபைல் யூனிட்களும், 26 பறக்கும் படை குழுவும், 179 அறை கண்காணிப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வகையில் தேர்வினை முழுமையாகக் கண்கானிக்க ஒளிப்பதிவு செய்யப்பட உள்ளது. மேலும், தேர்வாளர்கள் சிரமமின்றி தேர்வெழுத பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி, தளவாடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த முறை போலவே எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வகையில் தேர்வினை நடத்தும்படி, கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் என அனைவரும் சிறப்பாக பணியாற்றிட கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்தார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிதம்பரம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் சரவணன், ரசுக்கான், ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...