தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு

நாடெங்கிலும் 31.10.2016 முதல் 05.11.2016 வரை பொது வாழ்வில் தூய்மை மற்றும் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வலியுறுத்தி, இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி, அனுசரிக்கப்பட்டு வரும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஊழியர்களிடையே விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல்மேலாளர் சந்திரபால் ஊழியர்களுக்கு கண்காணிப்பு உறுதிமொழி செய்து வைத்தார். சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். 



நிகழ்ச்சியில் சேலம் தமிழக அரசு காவல் துறை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஏற்காடு மான்ட்போர்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜே. ஜார்ஜ் பேசுகையில் ரயில்வே ஊழியர்கள் ரயில்வே சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதில் மட்டுமன்றி, தங்களது அன்றாட பணிகளையும் ஊழல் கறை இன்றி தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்று கூறினார். தெற்கு ரயில்வே தலைமையக துணைத் தலைமை கண்காணிப்பு அதிகாரி காயத்ரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர்  விஜுவின் நன்றியுரை வழங்கினார்.



Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...