யானைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் - வால்பாறை வனத்துறை


வால்பாறைக்கு உட்பட்ட சின்கோனா, சிறுகுன்றா, நல்லமுடி, பன்னிமேடு மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடுகள், பள்ளிக் கூடம், சத்துணவுக் கூடம், ரேசன் கடை உள்ளிட்டவற்றை இரவு நேரங்களில் சேதப்படுத்துவது வழக்கம். ஆனால், சில காலமாக பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் யானைகள் முகாமிடுவது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில், புதனன்று கேரள மாநில எல்லையான வாகமலை எஸ்டேட் பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டு இருந்தன. அதில் ஒரு யானை இரவு நேரத்தில் குட்டியிட்டு தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளின் நடவடிக்கை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த தாய் யானையானது குட்டியிட்டு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தான் ஆகியிருக்கும் எனவே பொது மக்கள் யாரும் அதன் அருகே சென்று தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...