சிறுவாணியின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட மத்திய அரசு தடை

சிறுவாணி ஆற்றில் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கேரள அரசின் அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டபாடி பகுதியில் அகழி மற்றும் சோலையூர் பஞ்சாயத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணையைக் கட்டி, ஆண்டுக்கு 4.5 டி.எம்.சி. நீரை கேரளப் பகுதிக்குள் திருப்பிவிட திட்டமிட்டட்டது. இது தொடர்பாக ஆய்வுசெய்ய, மத்திய அரசின் நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்ட மதிப்பீட்டு வல்லுநர் குழு அனுமதியும் அளித்திருந்தது. 

இதனைத்தொடர்ந்து, அணை கட்டும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான லாரிகளில் கருங்கல், ஜல்லிக்கல், மணல், இரும்பு உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டன. இதனிடையே, சிறுவாணியில் அணை கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி அமைப்புகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அணை கட்டும் முயற்சையை கைவிடக்கோரி தமிழக அரசின் சார்பில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். 

மேலும் முதல்வர் ஜெயலலிதா, சிறுவாணி அணை பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதில், தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இசைவு பெறாத நிலையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் 96-வது கூட்டத்தில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கு நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்கான பரிந்துரை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. 

இதனிடையே சிறுவாணியில் கேரளா அரசு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், அணை கட்டும் திட்டத்தை நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. அணை கட்டுவது தொடர்பாக மத்திய வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழக அரசின் ஒப்புதல் பெறும் வரை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், காவிரி தொடர்பான தமிழக அரசின் வழக்குகள் முடியும் வரை இத்திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு கொங்கு சிறுவாணி ஆற்றினால் பயனடையும் கோவை, ஈரோடு மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...