பெண்ணிடம் நகை பறிப்பு

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி மோகனாம்பாள் (36). இவர் சனிக்கிழமையன்று காலை கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். தனபால் லே அவுட் அருகே நடந்து வந்துகொண்டிருந்த போது தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மோகனாம்பாளின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த மோகனாம்பாள் கூச்சலிடவே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சில நொடிகளில் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதுகுறித்து, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....