கோவை ஸ்மார்ட் சிட்டி தொடர்பான இயக்குநர் குழுக் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையருமான பிரகாஷ் தலைமையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான இயக்குநர் குழுக் கூட்டம் இன்று (21.10.2016) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதிநிதிகளுடன் செயலாக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெலலிதா அறிவித்த சிறப்பு அறிவிப்பு திட்டங்களான  சங்கனூர்பள்ளம் சீரமைப்புப்பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டம், வெள்ளளுர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் குறித்தும், மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடங்களை, அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல் போன்ற திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

இதற்கு முன்னர் நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மற்றும் டவுன் ஹால் பெரிய கடை வீதி ஆகிய மாநகராட்சி வாகனங்கள் நிறுத்துமிடங்களை ஆய்வு செய்தார். மேலும், சங்கனூர்பள்ளம் கால்வாய் சீரமைப்புப்பணிகள் நடைபெறவுள்ள இடங்களான மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு டெக்ஸ்டூல் பிரிட்ஜ், அவினாசி ரோடு மற்றும் திருச்சி ரோடு ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சக ஒருங்கிணைந்த நிதி கோட்ட இயக்குநர் மஜும்தார், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...