கோவை தீ விபத்தில் சிகிச்சை பெரும் 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம்

கோவையில் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு பேர் நாளை வீட்டுக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக அம்மருத்துவமனை முதல்வர்  எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபூங்கா அருகே கேபிஆர் ஐஏஎஸ் அகாடமி என்ற இலவச பயிற்சி மையத்தில், நேற்று மதியம் 3.45 மணியளவில் சுமார்  60 மாணவ, மாணவிகள் பயிற்சி தேர்வு எழுதி கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அவசரமாக வெளியேறிய நிலையில் சில மாணவர்கள் கட்டிடத்திற்குள் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டதுடன், சிக்கியிருந்தவர்களை மீட்க முயன்றனர். தீயணைப்பு துறையினருடன் இணைந்து பொது மக்கள் மற்றும் மாணவர்கள் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை உடைத்து சிக்கியவர்களை மீட்க உதவினர். இதையடுத்து 2 மாணவிகள் உட்பட 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லும் வழியில் சக்திவேல் என்ற மாணவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதில், 4 பேர் அம்மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர். தீவிபத்தின் போது காயத்திரி என்ற மாணவியின் உடல்நிலை ஆபத்தான சூழலில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது முன்னேற்றம் இருப்பதாகவும், அதே வேலையில் மற்ற 4 பேரின் உடல்நிலை தேறி வருவதாகவும், அதில் 2 பேரை நாளை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் எட்வின் ஜோ தெரிவித்தார். தனியார் ஐஏஎஸ் மையத்தில் ஏற்பட்டது பட்டாசு விபத்தில் இல்லை என மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வந்த வேலையில் தற்போது அரசு மருத்துவமனை முதல்வரும் அதே கருத்தை கூறுவது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...