மாணவியை கேலி செய்த சக மாணவர்கள்: அவமானத்தில் தந்தை தற்கொலை முயற்சி!


கோவை: நவக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதி பஞ்சாயத்து நால் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முருகன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி தின கூலி வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினரின் மகள் காயத்திரி அங்கு உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு பயிலும் சக மாணவர்கள் காயத்திரியை கேலி செய்தும் அவமானபடுத்தியும் மன உளைச்சலுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து முருகன் அந்த மாணவர்களை கண்டித்து பள்ளி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் முருகனையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முருகன் குற்றம்சாட்டினார். மேலும் இதுகுறித்து க.க.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் மனு ஏற்கபடாததால் மனமுடைந்த முருகன் கடந்த செவ்வாய்கிழமை எறும்பு பொடியை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தவரை மருத்துவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.



ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த வார்டு கவுன்சிலர் மற்றும் அவரது உறவினர்களால் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லாததால், எனவே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என கூறி அரசு மருத்துவமனைய வளாகத்தின் உள்ளே தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...