''வளர்ந்துவரும் பயோமெட்டீரியல்ஸ்''- தேசிய கருத்தரங்கு

கோவை பாரதியார் பல்கலைக் கழக நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் சமூகத்திற்கான பயோமெட்டீரியல்ஸ் மற்றும் செயற்கை உறுப்புகள் நிறுவனம் இணைந்து நடத்தும் ''வளர்ந்துவரும் பயோமெட்டீரியல்ஸ்'' என்ற மூன்று நாள் தேசிய கருத்தரங்கின் துவக்க விழா பல்கலைக் கழக உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் புதனன்று (இன்று) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் கணபதி தலைமையேற்றார். சமூகத்திற்கான பயோமெட்டீரியல்ஸ் மற்றும் செயற்கை உறுப்புகள் நிறுவனத்தின் தலைவர் சி.பி.சர்மா, பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், கங்கா மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் ராஜ சபாபதி, பல்கலைக் கழக பதிவாளர் மோகன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர். இதில், நானோ அறிவியல் துறை பேராசிரியர் பலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.



இதனைத்தொடர்ந்து சர்மா, பயோமெட்டீரியல்ஸின் தோற்றம் மற்றும் தேவைகள் குறித்தும், தன் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்த கருத்தரங்கில், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள், பல்வேறு பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள், பாரதியார் பல்கலையைச் சேர்ந்த பல்வேறு துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் முடிவில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தலைவர் பொன்பாண்டியன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...