புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கு - முன்னாள் துணை காவல் ஆணையர் ஆஜர்


கோவையில் கடந்த 2014ம் ஆண்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பணை செய்யப்பட்டதாக, தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மாநகர துணை காவல் ஆணையர் உட்பட, 5 காவல்துறையினர் கோவை குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

கடந்த 2014ம் ஆண்டு கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த மங்கள்ராஜ் என்ற வியாபாரி தனது குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மாயமானதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். 

இதனிடையே இவ்வழக்கில் அப்போது கோவை மாநகர துணை ஆணையராக பணியாற்றிய சுகுமார், உதவி ஆய்வாளர் செல்வராஜ், காவலர்கள் செந்தில்குமார், ஜான், கதிரேசன் ஆகிய 5 காவல்துறையினருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறியதை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இதை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய 17 பேர் மீதும் சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதன் பேரில் 17 பேரையும் ஆஜராகுமாறு கோவை குற்றவியல் முதன்மை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 காவல்துறையினர் உட்பட 17 பேர் இன்று நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் ஆஜராகினர்.

இதையடுத்து வழக்கை வருகிற நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்த சுகுமார் தற்போது பழனி சிறப்பு காவல்படை பட்டாலியன் கமான்டண்ட் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் 5 போலீசார் ஆஜரானதை அடுத்து நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...