தீபாவளியை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்: தீயணைப்புத் துறை அறிவுரை


தீபாவளியை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடும் விதத்தில் கோவை மாவட்ட தீயணைப்புத் துறை பல முன்னெச்சறிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சந்திரன் நமது நிருபரிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் மட்டும் 8 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை, கோவை தெற்கு - 0422 2300101, கோவை வடக்கு - 0422 2450101, கணபதி - 0422 2511001, பீளமேடு - 0422 2595101, பொள்ளாச்சி- 954259 223333, மேட்டுப்பாளையம் - 04254 222299, அன்னூர் - 04254 264101 மற்றும் வால்பாறை - 95425 9222444 ஆகிய 8 பகுதிகள் ஆகும். 



அவரச காலங்களில் உதவும் வகையில் கோவை மாவட்டத்தைச் சுற்றிலும் இந்த தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. வரும் தீபாவளிக்காக கோவை மாவட்டத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும் என தீயணைப்புத் துறை முன்னெச்சறிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தீயணைப்புத் துறையின் சார்பில் தீபாவளிக்கு முந்தைய நாள், தீபாவளி நாள், தீபாவளிக்கு அடுத்த நாள் என மூன்று நாட்களுக்கு காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர். டவுன்ஹால் உள்ளிட்டு பல பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருக்கும். அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் தீயணைப்புத் துறையின் பொது எண்ணான 101-க்கு தகவல் தெரிவிக்கலாம், மேலும், மேற்குறிப்பிட்டுள்ள அந்தந்தப் பகுதி தீயணைப்பு நிலைய எண்ணிற்கு தொடர்பு கொண்டால் விரைந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். 



பட்டாசுக் கடை:

பட்டாசுக் கடைகள் அமைக்க பல அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதுபோக பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பட்டாசுக் கடைக்காரர்கள் தங்களது கடைக்குள் மணல் மற்றும் தண்ணீரை அதிகளவில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். கடையினை பிரபலப்படுத்த சில பட்டாசுக் கடைகளின் முன்பே பட்டாசுகள் வெடிக்கப்படும். அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். மெழுகுவர்த்தி, கொசுவத்தி, தீப்பெட்டி உள்ளிட்டவற்றை கடையினுல் பற்றவைக்கக் கூடாது. பட்டாசுக் கடைகள் அனைத்தும் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் செயல்படுகின்றனவா என்று தீபாவளியின் முந்தைய நாள் ஆய்வு செய்யப்படும். அப்போது, விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசுக் கடையின் உரிமையாளர் காவல்துறைடம் ஒப்படைக்கப்படுவார்.

விழிப்புணர்வுப் பிரச்சாரம்:

நாளை (அக்.19) முதல் மாவட்டம் முழுவதும் தீயணைப்புத் துறையின் சார்பில் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அதுபோக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொது இடங்கள், அரசு அலுவலகம், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரம் மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. தீயணைப்புத் துறை இயக்குநர் ரமேஷ் குடவாலா அவரின் அறிவுரையின் பேரிலும், இணை இயக்குநர் விஜய சேகரின் வழிகாட்டுதலின் படியும் இத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு சந்திரன் கூறினார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...