மாணவர்களின் திறமையை வளர்க்க பார்க் கல்வி நிறுவனத்தில் இன்னோஒலிம்பிக்ஸ் போட்டி


இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் நினைவாக பார்க் கல்வி நிறுவனத்தில் இன்னோஒலிம்பிக்ஸ்- 2016 போட்டி நடைபெறவுள்ளது. இதில் மாணவர்களின் அறிவியல் தொடர்பான திறமைகள், கண்டுபிடிப்புகளை வளர்க்கும் விதத்தில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டிகளின் விபரம் வருமாறு:-

1) அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சி, 2) வினாடி- வினா, 3) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்பான சொற்பொழிவுகள், 4) ஓவியப் போட்டிகள், 5) சைஃபி- அறிவியல் புனைக்கதைகள் ஆகியவை ஆகும்.

இப்போட்டிகளில், அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், வான்வெளி போக்குவரத்து மற்றும் அறிவியல் குறித்தும் மாணவர்களுக்கு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 

இந்நிகழ்வில், மாணவர்கள் உருவாக்கிய விமான மாதிரிகள் எவ்வாறு செயல்படுகின்றன எனவும், 100 அடி உயரத்தில் சுமார் 20 நொடிகள் பறக்கக் கூடிய விமான மாதிரியும் இடம்பெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அறிவியல் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் ரோபோ விளையாட்டுகளும், கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

அப்துல் கலாமின் நினைவாக வரும் அக்டோபர் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகளும், பங்குபெரும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. பார்க்குழுமத்தால் நடத்தப்படும் இன்னோஒலிம்பிக் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்க உள்ளது என பார்க் குழுமத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 99655 11155 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...