65 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பர்கர் தயாரித்து ஏ.ஜே.கே கல்லூரி சாதனை!

நவாக்கரையில் உள்ள ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறை சார்பில் மாணவர்கள் இணைந்து 65 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இந்திய காய்கறி பர்கர் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

இதனை தயாரிப்பதற்கு 35 கிலோ மைதா, 1.750 கிலோ சக்கரை, 700 கிராம் உப்பு, 1050 கிராம் ஈஸ்ட், 21 லிட்டர் தண்ணீர் மற்றும் 1.750 மில்லி லிட்டர் தாவர எண்ணெய் போன்ற பொருட்கள் உபயோகப்படுத்தபட்டது. இது 1 அடி 16 அங்குல உயரம் மற்றும் 3 அடி அகலம் கொண்டது. சமையல் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து பர்கர் தயாரிப்பதற்கு 16 மணி நேரம் ஆனது. 3 மாதங்கள் திட்டமிட்டு, 47 மாணவர்கள் மற்றும் 5 தலைமை சமையல் வல்லுநர்கள் இந்த பர்கர் தயாரிப்பில் ஈடுபட்டனர். 134 பவுண்டு எடையை கொண்டுள்ள பர்கர் தான் உலக சாதனை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

கீரை, தக்காளி, பட்டாணி, சிவப்பு முட்டைக்கோஸ், லெட்டூஸ் மற்றும் ஆலிவ் போன்ற காய்கறி வகைகள் பயன்படுத்தப்பட்டன. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரத்தேயகமான பிரட் வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரோமா நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார், ஏ.ஜே.கே கல்லூரி செயலாளர் அஜித்குமார் வரவேற்புரையாற்றினார்.  ஏ.ஜே.கே கல்லூரி இயக்குனர் பிந்து அஜித், கேட்டரிங் துறைத் தலைவர் பிரகாஷ், ஆலோசகர் சம்பத் மற்றும் மேலாண்மை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...