மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,237 கனஅடியில் இருந்து 4,253 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 67.38 அடியாகவும், நீர் இருப்பு 30.49 டிஎம்சியாகவும் உள்ளது.அணையில் இருந்து சாகுபடிக்கு நீர் திறப்பு 18,000 கனஅடியாக உள்ளது.


கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகரில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு கடந்த 20-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி வரை மேலும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
நீர்வரத்தைவிட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. 
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...