சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியில் சுமார் 500-க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பேரிட இன்னல் குறைப்பு குறித்த விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு பெரும் விதமாக நகரின் முக்கிய வீதி வழியாக சென்று வ.உ.சி மைதானத்தை சென்றடைந்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ஆம் நாள் சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, தீயில் இருந்து பாதுகாத்துகொள்ளுதல் ஆகிய சம்பங்களிலிருந்து பொதுமக்கள் எந்தவித பாதிப்புமின்றி தங்களை காத்துக்கொள்வதே இதன் நோக்கமாகும். வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியதையொட்டி மாவட்டத்தில் எவ்வித பாதிப்புகள் வராத வண்ணம் முழுமையாக கண்காணித்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தங்குவதை முன் கூட்டியே தெரிந்து தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்திடும் அளவிற்கு வாய்க்கால் பகுதிகளை சீர் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளும் வகையிலும் மற்றும் பொதுமக்கள் மழைக்காலங்களில் காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்தி எல்லோரும் சுகாதாரத்தை பாதுகாத்திடவும் மேலும் பொதுமக்கள் அனைவரும் பேரிடர் காலங்களில் தன்னைத்தானே காத்துக்கொள்வது மட்டுமின்றி குழந்தைகள், முதியோர்கள் ஆகியோரை எந்தவித பாதிப்புமின்றி பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் தெரிவித்தார். 

இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ், பயிற்சி ஆட்சியர் பிரியங்கா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)சிதம்பரம் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...