2 கிலோ தங்கக்கட்டிகள் மாயம்- வடமாநில வாலிபருக்கு வலை

கோவை, தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர் அதே பகுதியில் தங்கப்பட்டறை வைத்து நிர்வகித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தங்க நகை செய்யும் ஒப்பந்தம் ஒன்று வந்துள்ளது. இதற்காக, தனது பட்டறையில் பணிபுரியும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புற்றுமல் என்பவரிடம் 2 கிலோ 250 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கொடுத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 65 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், புற்றுமல் தங்க நகைகளுடன் திடீரென மாயமானதால், அதிர்ச்சியடைந்த முருகன் இதுகுறித்து வெரைட்டிஹால் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மாயமான வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...