முதல்வருக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் வரும் லண்டன் டாக்டர் ?

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

முதல்வரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, கடந்த 2-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். இதனைத்தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட குழுவினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த குழுவினர் தேவையான ஆலோசனைகளை வழங்கினர். 

இதற்கிடையில் கடந்த 6-ம் தேதி லண்டனில் இருந்து மீண்டும் வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் டாக்டர்களும் இணைந்து முதல்வருக்கு அடுத்தகட்டமாக அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து தீவிர ஆலோசனைகளை நடத்தினார்.

இதன்பின், அவர்களின் பரிந்துரைப்படி மருத்துவக் குழுவினர் முதல்வருக்கு செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரல் சிகிச்சை, நோய் தொற்றுக்கான மருந்துகள் மற்றும் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முதல்வருக்கு ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரப்பி சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மீண்டும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே வியாழனன்று (இன்று) சென்னை வருவதாகவும், அவர் சென்னையில் 5 நாட்கள் தங்கி முதல்வருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகளை ஆராய்ந்து, அடுத்தக்கட்ட சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார் எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது. மீண்டும் லண்டன் மருத்துவர் வருவதால், விரைவில் முதல்வர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...