பூஜை விழாக்களை முன்னிட்டு கோவை சந்தைகளில் குவியும் கூட்டம். பூக்கள், பழங்களின் விலை கடும் உயர்வு!


நாளை மறுநாள் ஆயுத பூஜையும் அதை தொடர்ந்து வரும் 12ம் தேதி சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாட்களில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் தாங்கள் உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் புத்தகங்களுக்கு பூக்கள், பழங்களால் அலங்காரம் செய்து பூஜித்து வழிபடுவர். விழாவுக்கு இன்னும் ஒரு தினமே உள்ள நிலையில் கோவையில் உள்ள மளிகை மற்றும் பூக்கள் சந்தைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பூமார்க்கெட் பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 






விலைஉயர்வு 

பொதுமக்கள் பலரும் பூக்களை வாங்க குவிவதால் அவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி வியாபாரிகள் பூக்களின் விலையை 2 மடங்காக உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.  என்ன தான் விலை அதிகரித்தாலும், பூக்கள் வாங்கி பூஜை செய்தே ஆகவேண்டும் என்ற முனைப்பு பொதுமக்கள் ஆர்வத்துடன் அவற்றை வாங்கிச் செல்வதில் தெரிகிறது. 



பூக்களின்விலைப்பட்டியல்பின்வருமாறு:-

செவ்வந்திப் பூ ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

மல்லிகை பூ  ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது 

முல்லை பூ  ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஜாதி பூ  ஒரு கிலோ ரூ.270 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

அரளி பூ  ஒரு கிலோ ரூ.240 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தாமரை ஒன்று ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

செண்பகம் நான்கு ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 



பூக்களின் கடந்த வார விலைப்பட்டியலுடன் ஒப்பிடுகையில் தற்போது 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது. இது குறித்து பூ  வியாபாரி சையது கூறுகையில் , 'ஆண்டுதோறும் ஆயுத பூஜை, விநாயகர் சதூர்த்தி மற்றும் ஓணம் பண்டிகைகளின் போது பூமார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த ஆண்டை விட தற்போது வாடிக்கையாளார்கள் குறைவாகவே வருகின்றனர். இருந்த போதும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் விற்பனையாளர்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பெங்களூரு, ஓசூர், ராயக்கோட்டை,  சத்தியமங்கலம், ஆகிய பகுதிகளில் இருந்து எங்களுக்கு பூக்கள் கிடைக்கிறது. நாங்கள் மொத்த கொள்முதல் செய்யும் போதே அதிக விலை கொடுத்து பூக்கள் வாங்குவதால் தான் தற்போதைய இந்த விலை உயர்வுக்கு காரணம்' என்றார்.  






பழங்களின் விலைப்பட்டியல்பின்வருமாறு :- 

ஆப்பிள் - ரூ.150 

ஆரஞ்சு - ரூ.80

மாதுளை - ரூ.160

பன்னீர் திராட்சை - ரூ.80

சப்போட்டா - ரூ.80

கொய்யா - ரூ.100 

பூக்களின் விலை ஏற்றம் போல பழங்களின் விலைகளிலும் சிறிது விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...