பழங்குடி மக்களின் நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

பழங்குடி மக்களுக்களின் நிலத்தை அபகரித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஆலந்துரை அடுத்த இக்கரை போலுவாம்பட்டியைச் சேர்ந்த கிராமத்து மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




கோவை, ஆலந்துரை அடுத்த இக்கரை போலுவாம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமாக 43 ஏக்கர் நிலம் உள்ளது. இது பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டது என்றும், நிலத்தை ஈஷா யோகாவினர் அபகரித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி அக்கிராமத்தை சேர்ந்த100க்கும் மேற்பட்டோர் , கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இது குறித்து வழக்கறிஞர் பன்னீர் செல்வம் செய்துயாளர்களிடம் பேசுகையில் :- 
அரசுக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலம் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதை ஈஷா யோகா அமைப்பை சேர்ந்தவர்கள் அபகரிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, எழுத்து பூர்வமாக நாங்கள் இனி அந்த நிலத்தை உபயோகிக்க மாட்டோம் என்று அந்த அமைப்பினர் எழுதி கொடுத்தனர். ஆனல் தற்போது, அங்கு கட்டிடங்களை அனுமதியின்றி கட்டி வருகின்றனர். பழங்குடி மக்களுக்கான அரசு ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்து தனியாருக்கு கொடுத்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்துக்கு 2 செண்ட் இடம் என்று பிரித்து கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...