அதிமுக வேட்பாளர்களை மாற்ற கோரி அதிமுக தொண்டர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்.

கோவை மாநகராட்சி 84வது வார்டு வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய கவுன்சிலரான அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக மாநகராட்சி 84 வது வேட்பாளரை மாற்ற கோரி ஏராளமான அதிமுகவினர் இன்று கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கணபதி சுப்பிரமணியம் ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருபவர் எனவும், தமிழக முதல்வர் பேனரை கிழித்தவர் எனவும் குற்றம்சாட்டிய அவர்கள், கணபதி சுப்பிரமணியம் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.

எனவே 84வது வார்டு வேட்பாளரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும வலியுறுத்திய அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர். ஏற்கனவே இராமநாதபுரம் பகுதியில் 68வது வார்டு, 70வது வார்டு, 71 வார்டு ,73வது வார்டு, 75 வதுவார்டு ஆகியவார்டுகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரு தினங்களாகஅதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 84வது வார்டு அதிமுக வேட்பாளரையும் மாற்றவேண்டும் என கோரி அதிமுகவினர் அதிமுக அலுவலகத்தை மூன்றாவது நாளாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...