சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் பாதிக்காதவகையில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

பாரம்பரியமான வழக்கப்படி சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் எந்தவிதத்திலும் பாதிக்காதவாறு விநாயகர் சதூர்த்தி தினத்தை சிறப்பாக கொண்டாடும்படி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தியின் போது வழக்கமாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக இரசாயன வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயார் செய்வதை தவிர்க்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித இராசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரிக்க வேண்டும்.

இரசாயண வர்ணம் (பெயின்ட்) பூசி விநாயகர் சிலைகளை தயாரிப்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். மேற்சொன்ன விதிமுறைகளை மீறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதோடு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் இரசாயன வர்ணம் பூசி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்த தடை விதிக்கப்படும். 

எனவே, விநாயகர் சதூர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுசூழல் மற்றும் நீர்நிலைகளை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறு சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...