“நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக” சிங்காநல்லூர் குளம் அறிவிப்பு


நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் குளத்தை “நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக” அறிவித்து கல்வெட்டினை திறந்து வைத்து விழா பேருரையாற்றினார்.



கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் குளத்தை “நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக” இன்று (ஜூலை 30) அறிவித்து, கல்வெட்டினை திறந்து வைத்து, மரக்கன்றினை நட்டு வைத்து டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவு வனம் துவக்க விழா பேருரையாற்றினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. தொடர்ந்து அவர் பேசுகையில்,

நகரமயமாதல் காரணமாக இயற்கை சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு நகர்புரத்தில் பல்லுயிர்கள் குறைவதற்கு காரணியாகும். இயற்கை சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் பருவநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு புவி வெப்பமாகிறது. இது உலகலவில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளது.

ஆகையால் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் குடிமராமத்து திட்டம் மூலம் குளங்கள், வாய்க்கால்கள் தூர்வார ஆணை வழங்கி முதல் கட்டமாக 100 கோடியும், மீண்டும் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாட்டில் அனைத்து குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, குளங்களிலிருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாய நிலத்தில் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும், சிறுதுளி, ஈசா மற்றும் சுற்றுச்சூழல், பசுமை பாதுகாப்பு இய்க்கங்கள் மூலமாக பல்வேறு நீர்;நிலைகள் தூர்வாரப்பட்டும், மரம் நட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளையும், நிலத்தடி நீர் உயரவும் முன்னுரிமை அடிப்படையில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிங்காநல்லூர் குளம், நொய்யலை ஆதாரமாகக் கொண்டு நகர்புறத்தில் அமைந்துள்ள இக்குளத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் 720 வகையான பல்லுயிர்கள், ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான 200 வகையான மூலிகை செடிகள், 10 வகையான அழியும் தருவாயில் உள்ள பறவைகள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள நன்நீர் ஆமைகளின் வாழ்விடமாக இக்குளம் விளங்குகிறது.



சிங்காநல்லூர் குளம் 288 ஏக்கர் பரப்பளவில் 16-ம் நூற்றாண்டில் சோழ அரசர்களால் உருவாக்கப்பட்டது. கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அமைந்துள்ள 19 குளங்களில் வேறு எந்த குளத்திற்கும் இல்லாத சிறப்பம்சங்களான இயற்கைச்சூழல், பசுமை பரப்பு பல்லுயிர் செழுமை, கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் போன்றவை சிங்காநல்லூர் குளத்திற்கு உள்ளது. அத்துடன் இவ்விடம் மனிதர்கள் இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழும் உணர்வை ஊக்குவிக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.

நகர்புற பல்லுயிர்கள் எப்போதும் புறக்கணிக்கப்படும் நிலையில், சிங்காநல்லூர் குளம், அவற்றுடன் தொடர்புடைய பகுதிகளை நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து அற்பணிக்கப்படுவது தமிழகத்தில் முதல் முறையாகவும், மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இச்செயல் மற்ற நகரங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குவதோடு தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும்.

முக்கியமாக, பல்லுயிர்கள் மற்றும் அதன் வாழ்விடங்களை பாதுகாக்க பல்வேறு துறையினரால், அமைப்புகளால் முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கோவை மாநகராட்சியோடு நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி மையம் இணைந்து சிங்காநல்லூர் குளத்தை பல்லுயிர் பாதுகாப்பு மையமாக, பேணி காப்பதோடு இக்குளப்பகுதியில் மறைந்த இந்திய பேரரசின் முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் நினைவாக வனம் உருவாக்கி பாதுகாத்து இயற்கையோடு ஒன்றினைந்த வாழ்க்கை முறையை பற்றி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கும் மிகவும் உதவியாக அமையும்.

இச்சிறப்பு வாய்ந்த பணியை மேற்கொள்வதற்காக, கோவை மாநகராட்சிக்கும், நகர்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி மையம் சார்நத அனைவருக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று உரையாற்றினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன்,  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ஜூனன், எஸ்.இராமசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், துணை ஆணையாளர் ப.காந்திமதி, சலீம் அலி சென்டர் இயக்குநர் டாக்டர்.கே.சங்கர், பார்க் இன்ஸ்டியூசன் சி.இ.ஓ டாக்டர்.அனுஷா, ஓசை தலைவர் கே.காளிதாஸ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...