சி.ஆர்.ஐ. அறநிலை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

கோவை மாவட்டம், கீரணத்தம் கிராமத்தில் அமைந்துள்ள சி.ஆர்.ஐ. அறநிலை, பொது மக்களின் நலன் கருதி ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் கல்வி நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பொது மக்களின் தேவைக்கான அத்தியாவசியக் கட்டமைப்புகளை நிறுவ நிதியுதவி வழங்குதல் போன்ற மற்றும் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 



மேலும், கீரணத்தம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு கீரணத்தம் கிராமத்தில் ஓர் பல்நோக்கு மருத்துவமனை அமைத்திடத் திட்டமிட்டு, அது தொடர்பான பணிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக சி.ஆர்.ஐ. அறநிலை, கோவை சங்கரா கண் மருத்துவ மையத்துடன் இணைந்து கீரணத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களின் ஏழை எளிய மக்களின் நலன் கருதி இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

இந்த முகாமில் கீரணத்தம், கீரணத்தம் புதுப்பாளையம், கொண்டையம்பாளையம், வரதயங்கார்பாளையம், குரும்பாளையம், கோவில் பாளையம், கோட்டைப்பாளையம், அக்ரஹார சாமக்குளம், அத்திப்பாளையம், கோவிந்தநாயக்கன் பாளையம், இடிகரை, வட்டமலைப் பாளையம், சின்னவேடம்பட்டி, சின்னமேட்டுப் பாளையம், சரவணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையும், கண் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. கண் மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் 26 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

முன்னதாக கீரணத்தம் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுகுமார், சி.ஆர்.ஐ. அறநிலையின் மருத்துவ மையத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து இலவச கண் மருத்துவ முகாமினைத் துவக்கிவைத்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...