நீலகிரியில் ஆட்சியர் தலைமையில் மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாம்

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாமில் 101 பயனாளிகளுக்கு சுமார் 50 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இம்மனுநீதி நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, “இந்த மனுநீதி நாள் விழாவின் நோக்கமே மக்களைத் தேடி அரசு என்பதுதான் பொருள். தமிழக அரசின் உத்தரவின்படி அரசு அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றனர்.

தமிழக அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான திட்டங்களான உழவர் பாதுகாப்பு திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம், அம்மா குடிநீர்;, அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் போன்ற பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.



சமூக நலத்துறையின் மூலம் தாலிக்கு தங்கம் வழங்குதல், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், விலையில்லா சீருடைகள் 4 செட் வழங்கும் திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விலையில்லா பாடநூல், நோட்டு புத்தகம், சைக்கிள், காலணிகள் மற்றும் மடிகணினிகள் வழங்கும் திட்டமும், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகைகளுக்காக 1,225 பயனாளிகளுக்கு ரூ.38,99,650 வழங்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய தி;ட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் 17,191 பயனாளிகளுக்கு ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.1,71,91,000 வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறையின் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3,288 பயனாளிகளுக்கு ரூ.18 இலட்சமும், 192 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் 2,626 பயனாளிகளுக்கு மருத்துவ உதவி ரூ.358 லட்சம் வழங்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மூலம் 13,56,073 மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்தகம், நோட்டு புத்தகம், காலணிகள், மிதிவண்டிகள் மற்றும் மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது.

கூடலூர் நகராட்சி மூலம் கடந்த ஆறு ஆண்டுகளாக பொது நிதி மூலம் 170 பணிகள் ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம் 123 பணிகள் ரூ.33.34 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாலங்கள், சாலைகள், மழை நீர் வடிகால், திடகழிவு மேலாண்மை போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2017-2018–ம் ஆண்டு பொது நிதி மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் 295 பணிகள் ரூ.40.79 இலட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு 283 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 12 பணிகள் நடைபெற்று வருகிறது. பழங்குடியினருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் 46 வீடுகள் ரூ.95.00 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த திட்டங்களை பயன்படுத்தி பயன்பெற்றுக் கொள்ளலாம்.” என்றார். 

இம்மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் வருவாய் துறையின் சார்பில் 1 நபருக்கு தலா ரூ.12,000 வீதம் 17 நபர்களுக்கு ரூ.2,04,000 மதிப்பில் முதியோர் ஓய்வூதிய தொகையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 72 ஸ்மார்ட் கார்டுகளும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 12 நபர்களுக்கு 48 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 75 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் “ஒவ்வொரு அரசு துறைகளும் மனுக்களை பெறும் போது காகிதம் என நினைக்காமல் ஒரு உயிராக நினைக்க வேண்டும்.” என்றார். 

அதன்பின்னர் கூடலூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பிறத்துறை அலுவலர்களுக்கான கிராம வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பின்னர் கூடலூர் செம்பாலா பகுதியில் உள்ள நியாவிலைக் கடையில் பொருளின் தரம் மற்றும் அளவினையும் மற்றும் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடம், கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார். முன்னதாக உதகை ஏடிசி பேருந்து நிலையத்தின் அருகே புதிய ஆவின் பாலகத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். 

இம்முகாமில் கூடலூர் கோட்டாட்சியர் தினகரன், கூடலூர் வட்டாட்சியர் சிவக்குமார், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...